90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த நடிகை ஹீராவா இது?- லேட்டஸ்ட் போட்டோ
நடிகை ஹீரா
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது, அப்படி ஒரு நடிகை தான் ஹீரா.
டாப் நாயகியாக வலம் வந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்கள் நடித்து வந்தார்.
இதயம், நீ பாதி நான் பாதி, திருடா திருடா, சதிலீலாவதி, காதல் கோட்டை, அவ்வை சண்முகி உள்ளிட்டவை இவரது முக்கிய படங்கள்.
அதிலும் இதயம் படத்தில் வரும் “பொட்டுவைத்த ஒரு வட்ட நிலா” என்ற பாடல் காட்சியில் ஹீராவின் நடிப்பு அன்றைய ரசிகர்களின் மனதை கவர்ந்தது.
கடைசியாக 1999ம் ஆண்டு சுயம்வரம் என்ற படத்தில் நடித்துள்ளார், அதன்பிறகு எந்த படங்களும் அவர் நடிக்கவில்லை.
லேட்டஸ்ட் லுக்
2002ம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்த ஹீரா அவரை 2006 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.
51 வயதாகும் நடிகை ஹீராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் அட இவரா அது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
![ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க!](https://cdn.ibcstack.com/article/3e707cff-5a30-4e8a-b231-a04e7baa7612/25-67a4932d7ea9d-sm.webp)
ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க! IBC Tamilnadu
![சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/7c25a76b-c601-4e81-8659-8282f8763737/25-67a44269bee66-sm.webp)