நான் படப்பிடிப்பில் நடிகர் அஜித்தை அப்படியே பார்த்துக்கொண்டிருப்பேன்.. 90ஸ் நாயகி ஓபன் டாக்

Yathrika
in பிரபலங்கள்Report this article
அஜித்
நடிகர் அஜித், ரஜினியின் பிரபல வசனம் போல என் வழி தனி வழி என தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களையும் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து முடித்துவிட்டார். விடாமுயற்சி அடுத்த மாதம் வெளியாக குட் பேட் அக்லி ஏப்ரலில் வெளியாக உள்ளது.
தான் கமிட்டான படங்கள் வரை நடித்து முடித்துள்ளவர் தற்போது தனது கார் ரேஸிங் கனவை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளார். அடுத்த மார்ச், ஏப்ரல் வரை கார் ரேஸிங்கில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளாராம்.
நடிகை பேட்டி
90களில் சில ஹிட் படங்களில் நடித்து இப்போதும் மக்களால் அடையாளம் காணப்படும் நடிகை மந்த்ரா, அஜித் பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர், அஜித் மிகவும் ஜோவியலாக பேசக்கூடியவர். ரெட்டை ஜடை வயசு படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் என் அம்மா, அப்பாவுடன் அமர்ந்து சீட்டு விளையாடுவார், புரொடக்ஷனுடன் உட்கார்ந்து தான் சாப்பிடுவார்.
அஜித் மிகவும் சார்மிங்காக இருப்பார், அவரை பார்த்துகிட்டே இருப்பேன். ஹ்யூமர் சென்ஸ் அதிகம் உள்ளவர் அஜித் என பேசியுள்ளார்.