96 பட ரசிகர்களே இந்த விஷயம் பற்றி கேள்விப்பட்டீர்களா?- இனி கொண்டாட்டம் தான்
தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிட்ட அப்படி என்று ஒரு வசனம் இருக்கிறது.
இந்த வசனத்தை மாஸான ஒரு ஹீரோ பேசியதும் உள்ளது, வடிவேலு அவர்கள் காமெடியாக கூறியதும் படங்களில் உள்ளது.
அந்த வசனத்தை போல எல்லோர் மனதிலும் தூங்கிக் கொண்டிருந்த பள்ளி பருவ காதலை தட்டியெழுப்பியது விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த 96. அழகான காதல் கதை, அதற்கு ஏற்ப இசை என படம் பார்ப்போரை அப்படியே காதலில் மூழ்க வைத்தது.
பிரேம் குமார் இயக்கிய இப்படம் செம ஹிட்டடிக்க தெலுங்கில் கூட ரீமேக் செய்யப்பட்டது.
தற்போது படம் குறித்து என்ன தகவல் என்றால் இதன் 2ம் பாகத்திற்கான வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த 2ம் பாகத்தில் படக்குழு எப்படி மக்களை கவரப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.