த்ரிஷா, விஜய் சேதுபதி மீண்டும் நடிப்பார்களா.. 96 படத்தின் 2ம் பாகம் பற்றி இயக்குனர் பதில்
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோர் நடித்திருந்த படம் 96. பள்ளி கால காதல் நினைவுகளை இரண்டு காதலர்கள் மீண்டும் சந்திக்கும்போது நினைவுபடுத்தி பேசிக்கொள்ளும் விஷயங்கள் தான் இந்த படத்தின் கதையாக இருக்கும்.
தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இரண்டாம் பாகம்
இந்நிலையில் இயக்குனர் பிரேம்குமார் 96 படத்தின் இரண்டாம் பாகம் பற்றி ஒரு விழாவில் பேசியிருக்கிறார்.
இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இருவரும் மீண்டும் ஜோடியாக நடிப்பார்களா என கேட்டதற்கு முதல் பாகத்தில் நடித்தவர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் என அவர் பதில் கூறியிருக்கிறார்
அவர் இரண்டாம் பாகத்திற்கான முயற்சிகளில் தற்போது இருப்பதாகவும் அனைத்தும் உறுதியான பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.