பிரம்மாண்டமாக நடக்கப்போகும் விஜய் டெலி அவார்ட்ஸ்... வெளிவந்த தேதி விவரம்
விஜய் டிவி
எந்த மாதிரி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் ரசிகர்களின் ஆதரவை பெற முடியும் என்பதை தெளிவாக புரிந்துகொண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி.
இதில் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் தொடர்களும், இளைஞர்களை கவரும் வகையிலான தொடர்களும் உள்ளது.
பிக்பாஸ், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி சீரியல் என இதில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷோ மற்றும் சீரியல் உள்ளது.
டெலி அவார்ட்ஸ்
சின்னத்திரையில் கலக்கும் கலைஞர்களுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்தால் தான் அவர்களுக்கும் ஒரு ஆர்வம் வரும்.
அப்படி சின்னத்திரை கலைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் விஜய் டெலி அவார்ட்ஸ் விருது விழா நடக்க இருக்கிறது.
வரும் ஆகஸ்ட் 11ம் தேதி 9வது வருட விஜய் டெலிவிஷன் விருதுகள் நடக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.