தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... கடும் துக்கத்தில் அவரது குடும்பம்
அர்ச்சனா
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் அர்ச்சனா.
1999ம் ஆண்டு ஜெயா டிவியில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கியவர் 2000ம் ஆண்டு சன் டிவி பக்கம் வந்தவர் செம ஹிட் ஷோக்கள் தொகுத்து வழங்கி அதிக மக்களை கவர்ந்தார்.
சுமார் 7 ஆண்டுகள் காமெடி டைம், இளமை புதுமை ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் 2008ம் ஆண்டு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் விஜய் டிவி பக்கம் வந்தார்.
சின்னத்திரையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேல் பயணித்து வருகிறார். தற்போது ஜீ தமிழில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
சோகமான செய்தி
இந்த நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அர்ச்சனாவின் அம்மா இன்று உயிரிழந்துள்ளாராம்.
தனது அப்பாவுடன் அம்மா எடுத்த பழைய புகைப்படத்தை பகிர்ந்து அர்ச்சனா இந்த செய்தியை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.