இது வேற லெவல் இல்ல, அதுக்கு மேல...கர்ணன் டீசர் பார்த்த இயக்குனர் விமர்சனம்

Karnan Teaser Director's Review
By Kumar Mar 14, 2021 12:08 PM GMT
Report

மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து இயக்கிய வரும் படம் தான் கர்ணன்.

தனுஷ் கதாநாயகனாக நடித்து, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தாணு இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் டீசரை பார்த்து பிரபல இயக்குனர் சுப்பிரமணியம் சிவா விமர்சனம் கூறியுள்ளார்.

இதில் " தம்பி மாரி... #KarnanTeaser பார்த்தேன்... வேற லெவலா இல்ல... இதுக்கு பேரே வேற வைக்கனும்... ப்பா..

உன் #கர்ணன்...எல்லோர் மனதையும் உலுக்காமல் விடமாட்டான்...உன் குழு மொத்தத்திற்கும், மிக பெரிய வெற்றிகான சத்தத்தின் வாழ்த்துக்கள் Folded hands " என பதிவிட்டுள்ளார்.

இதன்முலம் இப்படத்தின் டீசருக்கு எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் கூடியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US