பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடக்கும் அதிரடி திருப்பம் - அதுவும் இப்படியா
சின்னத்திரையில் குடும்ப ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சீரியல்களில் ஒன்று விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இதில் சுஜிதா, ஸ்டாலின், குமரன், காவ்யா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் தொலைக்காட்சி விருதுகளில் கூட துணை நடிகை, சிறந்த நடிகை, உள்ளிட்ட பல விருதுகளை தட்டி சென்றது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தீடீரென அதிரடி திருப்பம் நிகழ்விருக்கிறது.
ஆம் தங்களது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, வீட்டுக்கு வீடு சென்று இலவசமாக மல்லிகை பொருட்களை டெலிவரி செய்யலாம் என குடும்பத்துடன் முடிவெடுக்கின்றனர்.
மேலும் அதற்கான முதல் படியாக தெருவுக்கு தெரு, அண்ணன் தம்பிகள் ஒன்றாக இணைந்து போஸ்டர் ஒட்டி வரும் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..