துணிவு படத்தை பார்த்துவிட்டு கொள்ளை அடிக்க முயன்ற நபர்..விசாரணையில் வெளிவந்த தகவல்
தமிழ் நாட்டில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகும் படங்களை அவரின் ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடுவார்கள்.
சமீபத்தில் இவர் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
இதையடுத்து அஜித்தின் 63 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான ஷூட்டிங் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொள்ளை சம்பவம்
துணிவு படம் வெளியாகும் தினம் அன்று அஜித் ரசிகர் ஒருவர், லாரி மீது நடனமாடும் போது கால் தடுக்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் துணிவு படத்தில் வரும் கொள்ளை காட்சி பாணியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அணில் ரகுமான் என்ற நபர் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். வாழ்க்கையில் ஏற்பட்ட விருக்தியால் இப்படி செய்து விட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விஜய் படத்தால் நஷ்டத்தை சந்திக்க போகிறாரா தில் ராஜு.. போட்ட பணம் கைக்கு வருமா