குக்கு வித் கோமாளி பிரபலம் வெளியிட்ட போஸ்டர்! ஹீரோ யார் தெரியுமா? அந்த பிரபலத்தின் மிக நெருங்கிய உறவினர்!
டிவி நிகழ்ச்சிகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களை இந்த கொரோனா காலத்தில் அதிகம் கவர்ந்தது குக்கு வித் கோமாளி தான்.
இவ்வருடம் இரண்டாம் சீசன் ஆக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்டு அண்மையில் வெளியேற்றப்பட்டவர் தர்ஷா குப்தா. தற்போது தமிழில் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
திரௌபதி படத்தின் மூலம் பெரும் கவனத்தை பெற்ற இயக்குனர் மோகன் இப்படத்தை இயக்க திரௌபதி நாயகன் ரிச்சர்டு இப்படத்தின் ஹீரோவாக நடிக்கிறாராம்.
காதலர் தினமான ஃபிப்ரவரி 14 ல் காலை 9 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரு, மாலை 6 மணிக்கு முக்கிய அப்டேட் வெளியிடப்படவுள்ளதாம்.
ரசிகர்கள் தர்ஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ரிச்சர்டு நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.