சன் டிவி-யில் இருந்து விலகி, விஜய் டிவி சீரியலில் ஹீரோவான பிரபல நடிகர் ! யார் அந்த நடிகர் தெரியுமா?
பிரபல சின்னத்திரை சீரியல்களுக்கு எப்போதும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது, பிரபல தொலைக்காட்சிகளான சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியின் புதிய சீரியலுக்காக சன் டிவி முக்கிய சீரியல் நடிகர் விலகியுள்ளார். ஆம் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியலில் நடித்து வந்த முன்னா என்பவர் தற்போது அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த ஜூலை 2020-ல் இருந்து சந்திரலேகா சீரியலில் நடித்து வரும் முன்னா, தற்போது அந்த சீரியலில் இருந்து விலகி கொண்டு விஜய் டிவி-யின் ராஜபார்வை என்ற புதிய சீரியலில் ஹீரோவாகியுள்ளார்.
மேலும் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள முன்னா, "மாற்றம் ஒன்றே மாறாதது! மாற்றமே சிறந்த முன்னேற்றத்தை தரும்! நல்லதொரு மாற்றத்தை எதி்ர் நோக்கி, புதிய பாதையில் புதிய பார்வையுடன் (ராஜ பார்வையுடன்) என் கலை பயணம் இனி விஜய் டிவியுடன் தொடரும்’ எனக் குறிப்பிட்டு, சந்திரலேகா குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி தற்போது சந்திரலேகா தொடரில் இருந்து முன்னா விலகுவதால், சஞ்சய் பரந்தாமன் கதாபாத்திரத்தில் அவருக்கு முன்பு நடித்து வந்த ஜெய் தனுஷ் மீண்டும், சன் டிவி-யின் சந்திரலேகா குழுவில் இணைந்துள்ளார்.