தளபதி விஜய்யால் நஷ்டம் அடைந்ததாக கூறப்படும் தயாரிப்பாளர், அடுத்த படத்திற்காக இணையவுள்ளனரா?
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் வெளியாகி திரையரங்கிற்கு ரசிகர்கள் படையெடுத்ததை தொடர்ந்து 240 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
மேலும் இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பதாக கூறப்படுகிறது, இதற்கு முன் விஜய்யின் மெர்சல் படத்தை இதே நிறுவனம் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக ஒரு வட்டம் கூறி வரும் நிலையில், தளபதி 66 என்ற ஹாஷ்டாக்கை தளபதி விஜய்யின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.