இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இன்று பிறந்தநாள்.. அவருடைய மொத்த சொத்து மதிப்பு விவரம் இதோ
ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிறந்தநாள்
உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர். ரஹ்மானுக்கு இன்று பிறந்தநாள். 59வது பிறந்தநாளை கொண்டாடும் ரஹ்மானுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

திரையுலக நட்சத்திரங்களின் வாழ்க்கை முறை, சொத்து மதிப்பு, சம்பள விவரம், அவர்களுடைய வீடு குறித்து அவ்வப்போது இணையத்தில் தகவல் வெளியாகும். அந்த வகையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர். ரஹ்மான் ரூ. 1,712 கோடி சொத்துக்கு சொந்தக்காரர் என கூறப்படுகிறது. மேலும், இவர் ஒரு திரைப்படத்திற்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு சொந்தமாக லாஸ் ஏஞ்சல்ஸ், துபாய், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா உள்ளதாம். மேலும், அவரிடம் பென்ஸ், ஜாகுவார், போர்ஷே உள்ளிட்ட சொகுசு கார்களும் உள்ளன என கூறுகின்றனர்.

இது இணையத்தில் வெளிவந்த தகவலாகும், சினிஉலகத்தின் சொந்த கருத்து அல்ல. மேலும் இது அதிகாரப்பூர்வமான தகவலும் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.