இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சிறு வயது புகைப்படம்.. இதுவரை பலரும் பார்க்காத ஒன்று
‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான்.
இப்படத்தின் வெற்றியின் மூலம் தொடர்ந்து பல படங்களின் தனது இசையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து உலகளவில் பிரபலமாகியுள்ளார்.
இவர் இசையில் தற்போது பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்கள் கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் கூட, இவரின் மூத்த மகள் கதீஜாவின் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பிறந்தநாள் என்பதினால், அவருடைய அறிய புகைப்படங்கள் பல சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது ரஹ்மானின் 9 வயது புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் மற்றொரு சிறப்பு என்னவென்றால். ரஹ்மான் தனது 9 வயதில் தான், தனது முதல் ட்யூன் கம்போஸ் செய்தாராம்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது..
