மேடை ஏறி ஏ.ஆர்.ரஹ்மானை பாட விடாமல் தடுத்த போலீஸ்! ரசிகர்கள் கடும் அதிர்ச்சி
ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தியிலும் பல ஹிட் பாடல்கள் கொடுத்து இருக்கிறார்.
தற்போது ரஹ்மான் உலகம் முழுக்க இசை கச்சேரிகள் நடத்தி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பூனேவில் ஒரு பெரிய concert நடந்தது.

தடுத்த போலீஸ்
ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போதே மேடையில் ஏறிய போலீஸ் ஒருவர் பாடுவதை நிறுத்தும்படி ரஹ்மானை கூறி இருக்கிறார். மேலும் அவர் மேடையில் நடந்துகொண்டதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆனார்கள். ரஹ்மானும் மேடையில் இருந்து இறங்கி சென்றுவீட்டார்.
இது பற்றி விளக்கம் கொடுத்திருக்கும் பூனே போலீஸ், 10 மணி வரை தான் concert நடத்த அனுமதி, அதை தாண்டியும் ரஹ்மான் பாடியதால் தான் தடுத்து நிறுத்தினோம் என தெரிவித்து இருக்கின்றனர்.
ஆஸ்கார் விருது வென்று புகழ்பெற்ற ஒரு இசையமைப்பாளரை இப்படி நடத்தி இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.
அது இல்லனா.. கோடீஸ்வரனாக இருந்தாலும் வேண்டாம்: பிரேக்கப் செய்த நடிகை தர்ஷா குப்தா