பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் திடீர் திருப்பம், சந்தேகப்படும் தனம் ! கதறியழுத முல்லை, வெளியான பரபரப்பு ப்ரோமோ
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த ஒரு தொடர் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளதால் தற்போது இந்த தொடரை மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யவுள்ளனர்.
அண்ணன் தம்பி கதையை மையமாக கொண்டுள்ள இந்த சீரியல் அணைத்து தரப்பான குடும்ப ரசிகர்களையும் கவர்ந்து பெரிய வெற்றியடைந்துள்ளது.
மேலும் இதில் நடித்து வரும் முக்கிய கதாபாத்திரங்களான கதிர், முல்லை, தனம், என பலருக்கும் ஒரு தனித்தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கின்றனர்.
இந்நிலையில் தினமும் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் பல திடீர் திருப்பங்கள் நிறைந்துள்ளது. அந்த வகையில் தற்போது முல்லையிடம் காசை வைத்திருக்கும் படி தனம் கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த பணத்தை துளைத்து விட்டதாக கூறி முல்லை கண்கலங்கியுள்ளார்.
இதை சரி செய்யும் வகையில் கதிர் பணத்தை ஏற்பாடு செய்து பணத்தை துளைத்த இடத்திலே வைத்து விடுகிறான்.
தற்போது அந்த ப்ரோமோ ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது.