தீடீரென நெஞ்சுவலியால் தவித்த சன் டிவி சீரியல் நடிகை.. படப்பிடிப்பில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பூவே உனக்காக. இதில் கதாநாயகனின் அம்மாவாக நடித்து வருபவர் தான் நடிகை ஆமனி.
இவர் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ஆனஸ்ட் ராஜ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியல் மட்டுமின்றி தெலுங்கில் உருவாகி வரும் பல சிறு பட்ஜெட் திரைப்படத்திலும் ஆமனி நடித்து வருகிறார்.
அப்படி ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்து கொண்டிருக்கும் பொழுது, தீடீரென நெஞ்சுவலியால் தவித்துள்ளார் நடிகை ஆமனி.
இதனால் பதற்றமடைந்த படக்குழு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர் பயப்பட வேண்டாம், எதுவும் இல்லை என்ற பிறகே நிம்மதியாகியுள்ளனர் படக்குழு.