சூர்யா 40 படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரம்..! மீண்டும் இணைந்த கடைக்குட்டி சிங்கம் கூட்டணி...
சூர்யா தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் நவரச என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார், இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் அடுத்ததாக சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா 40 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, மேலும் தற்போது இப்படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிகர் சத்தியராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The immensely dynamic actor #Sathyaraj joins the cast of #Suriya40BySunPictures@Suriya_offl @pandiraj_dir @immancomposer#Suriya40 pic.twitter.com/p4rW9ldmN1
— Sun Pictures (@sunpictures) January 29, 2021