தேவயானி கணவர் ராஜகுமாரன் ஏன் இப்படி பேட்டிகள் கொடுக்கிறார்... ஆதவன் ஓபன் டாக்
ராஜகுமாரன்
தமிழ் சினிமாவில் 90களில் இருந்த ரசிகர்களுக்கு இயக்குனர் ராஜகுமாரன் யார் என்பது நன்றாக தெரியும்.
நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற ஒரு சில திரைப்படங்களை இயக்கி இருந்தார். நடிகராக என்றால் சந்தானத்துடன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தது தான் மக்களுக்கு நியாபகம் வரும்.
இடையில் சினிமா பக்கமே தலைக்காட்டாமல் இருந்தவர் இப்போது திடீரென தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

நடிகர் பேச்சு
ராஜகுமாரன் அவரது பேட்டிகளில், நான் என்னுடைய மனதில் பட்டதை தான் பேசுவேன், அடுத்தவர்களுக்காக நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.
எனக்கு எது பிடிக்கிறதோ அதை பிடிக்கிறது என்று சொல்கிறேன், பிடிக்கவில்லை என்றால் அதை குறை சொல்கிறேன் என பிரபலங்கள் குறித்து நிறைய மோசமான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இதுகுறித்து நடிகர் ஆதவன் ஒரு பேட்டியில் கூறுகையில், மகேந்திரன் சுமாரான இயக்குனர் என ராஜகுமாரன் பேசி இருக்கிறார்.
இதெல்லாம் ஏன் அப்படி பேசுகிறார், அப்படி பேசுவதால் தான் இன்னிக்கு எல்லாரும் அவரை பாக்குறீங்க, ஏதாவது நெகட்டீவாக சொன்னால் தான் பாக்குறாங்க.

ஆனால் உண்மையில் அவர் அப்படிபட்ட நபர் இல்லை, ஏன்னா இப்படி ஒரு புத்தி உள்ள ஆளா இருந்தா அவர் படமே எடுத்திருக்க மாட்டார் என கூறியுள்ளார்.