Kpy பாலா நல்ல பையன் தான், ஆனால் அந்த விஷயம்... ஓபனாக கூறிய ஆதவன்
KPY பாலா
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மற்றவர்களுக்கு உதவ மிகவும் பயப்படுகிறார்கள்.
உதவி செய்ய முன்வந்தாலும் அதை வேறு ஏதாவது ஒரு விஷயத்துடன் இணைந்து அப்படியே அவர்களை கெட்டவர்களாக காட்டிவிடுகிறார்கள். அப்படி தான் கடந்த சில வாரங்களாக ஒரு பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள், தனியார் நிகழ்ச்சிகள் என கிடைக்கும் வேலைகளை செய்து அதில் வரும் வருமானத்தில் மற்றவர்களுக்கு உதவி வருகிறார் KPY பாலா.
ஆனால் அவர் உதவி செய்யும் விஷயத்தை ஒரு குழு தவறாக கூறி வருகின்றனர், இதுகுறித்து நிறைய விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
ஆதவன் பேச்சு
பிரபல நடிகர் ஆதவன் ஒரு பேட்டியில், பாலா நல்ல பையன், அவனுக்கு எதிராக வரும் வதந்திகளுக்கு ஆதாரம் இல்லை. ஆனால் அவர் கொடுத்த ஆம்புலன்ஸ் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட வண்டி என புகார் வருகிறது.
அவர் வழங்கிய ஆம்புலன்ஸ்களில் ஒன்று 1990 மாடல், மற்றொன்று 2016 மாடல். பாலா பணம் கொடுத்து வாங்கி இன்னொருவருக்கு கொடுத்திருந்தால் 2வது ஓனர் பெயர் மாறி இருக்க வேண்டும். ஆனால் அப்படி மாறாமலேயே இருக்கிறது.
இது பற்றி ஆதாரத்தை பாலா வெளியிட வேண்டும் என பேசியுள்ளார்.