குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ
எதிர்நீச்சல்
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி மற்றும் மதிவதனி, மீண்டும் தேவசகாயமிடம் இருந்த இடத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர்.

அவனுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என இருவரும் அங்கு சென்ற நிலையில், அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. காரணம், அங்கு அந்த இடத்தை அப்படியே மாற்றி அமைத்திருந்தனர். இதனால் ஜனனி மற்றும் மதிவதனி சொல்வது பொய் என்பது போல் தெரிந்துவிட்டது.
ஆதிமுத்து போட்டோ
இவர்களுடைய கதை ஒரு பக்கம் நகர, மறுபக்கம் குணசேகரன், ஞானசேகரன், கதிர்வேல், சக்தி ஆகியோரின் தந்தை ஆதிமுத்துவின் போட்டோவை எடுத்துவிட்டதாக கரிகாலன் கூறுகிறார்.

மேலும், ஆதிமுத்துவின் போட்டோவுடன் வீட்டிற்கு வரும் கரிகாலன் 'உங்க அப்பாவை கூட்டிகிட்டு வந்துட்டேன்' என வாசலில் இருந்து கத்திக்கொண்டே வீட்டிற்குள் வருகிறார்.

ஆதிமுத்துவின் போட்டோவை பார்க்க, வீட்டில் உள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதையடுத்து என்ன திருப்பங்கள் எல்லாம் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.