7 நாட்களில் ஆடு ஜீவிதம் படம் செய்த வசூல் சாதனை.. எவ்வளவு தெரியுமா
ஆடு ஜீவிதம்
பெரிதும் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ஆடு ஜீவிதம். உண்மை கதையை மையாக வைத்து பென்யமின் எழுதிய நாவல் தான் ஆடு ஜீவிதம்.
இந்த கதையை இயக்குனர் பிளஸ்ஸி படமாக எடுத்துள்ளார். பிரித்விராஜ் மற்றும் அமலா பால் இருவரும் இணைந்து நடித்துள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல்
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் ஆடு ஜீவிதம் திரைப்படத்தின் 7 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் கடந்த 7 நாட்களில் ரூ. 90 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது.
பிரமயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் ப்ரேமலு படங்களை தொடர்ந்து மலையாளத்தில் இருந்து மீண்டும் ஒரு ஹிட் திரைப்படம் உலகளவில் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
