5 நாள் முடிவில் ப்ருத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் படம் செய்த மொத்த வசூல்- எவ்வளவு தெரியுமா?
ஆடுஜீவிதம்
மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ஆடுஜீவிதம்.
பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்தில் ப்ருத்விராஜ் கதாநாயகனாக நடிக்க அமலாபால் நாயகியாக நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த மார்ச் 28ம் தேதி வெளியானது.
பட வசூல்
நல்ல கதைக்களம் கொண்டு திறமையான நடிகர்கள் நடிக்க உருவாகியுள்ள ஆடுஜீவிதம் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது.
முதல் நாளில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 7.60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தற்போது வரை படம் மொத்தமாக ரூ. 75 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் படம் தெலுங்கில் மட்டுமே கொஞ்சம் நஷ்டத்தை சந்திக்கும் என கூறப்படுகிறது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
