ஆடு ஜீவிதம் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

Kathick
in திரைப்படம்Report this article
ஆடு ஜீவிதம்
நஜீப் என்பவரின் வாழ்க்கையில் நடந்ததை வைத்து பென்யமின் என்பவர் எழுதிய புத்தகம் தான் ஆடு ஜீவிதம். இந்த நாவலை தற்போது படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
பிளஸ்ஸி இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரித்விராஜ் மற்றும் அமலா பால் இணைந்து நடித்திருந்தனர். கிட்டதட்ட இப்படத்தை எடுக்க வேண்டும் என 16 ஆண்டுகளாக போராடியுள்ளாராம் பிரித்விராஜ். இதை அவரே கூறியுள்ளார்.
நேற்று உலகளவில் வெளிவந்த இப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இப்படம் உலக தரத்தில் இருக்கிறது என்றும், கண்டிப்பாக பல தேசிய விருதுகளை ஆடு ஜீவிதம் குவிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
வசூல்
இந்த நிலையில், மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த ஆடு ஜீவிதம் திரைப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் கண்டிப்பாக இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.