OTTயில் வெளியாகப்போகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம்.. எப்போது தெரியுமா?
ஆடுஜீவிதம் படம்
இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன படம் த கோட் லைஃப் ஆடுஜீவிதம்.
எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 25ம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியானது.
இப்படத்தை பார்த்த கமல்ஹாசன், மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி இருந்தனர்.
ஓடிடி ரிலீஸ்
கடின உழைப்பை போட்டு இப்படத்திற்காக தன்னை வருத்தி நடித்துள்ளார் பிருத்விராஜ்.
கண்டிப்பாக இப்படம் அவருக்கு தேசிய விருதை வாங்கி தரும் என நம்பப்படுகிறது. வெற்றிகரமாக திரையரங்குகளில் ஒளிபரப்பாகிய இப்படம் ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
தற்போது என்ன செய்தி என்றால் வரும் மே 26ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
