Box Office: AOT - Aakasamlo Oka Tara திரைப்படம் 8 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
Aakasamlo Oka Tara movie 8 days box office: துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த Aakasamlo Oka Tara திரைப்படத்தின் 8 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
AOT - Aakasamlo Oka Tara
வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து, அதை திரையில் மக்களுக்கு பிடித்தவாறு தனது நடிப்பில் வழங்கும் ஒருசில நடிகர்களில் துல்கர் சல்மானும் ஒருவர். இவர் நடிப்பில், கடந்த நவம்பர் 20-ஆம் தேதி வெளியான திரைப்படம் Aakasamlo Oka Tara. தமிழில் இப்படத்திற்கு ஆகாயத்தில் ஒரு தாரகை என தலைப்பு வைத்துள்ளனர்.

இயக்குநர் பவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் துல்கருடன் இணைந்து சாத்விகா வீரவல்லி, ரூஹானி சர்மா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒரு சிறிய கிராமத்தில் விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என கனவு காணும் பெண்ணின் நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்பதே இப்படத்தின் கதை.
8நாட்கள் வசூல் விவரம்
கடந்த வாரம் திரைக்கு வந்த Aakasamlo Oka Tara திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் நாளுக்கு நாள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகளவில் இதுவரை இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, Aakasamlo Oka Tara 8 நாட்களில் உலகளவில் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பொறுப்பு துறப்பு: Aakasamlo Oka Tara திரைப்படத்தின் 8 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல; நம் சினிஉலகத்தின் தரப்பில் இருந்து Track செய்யப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்ற தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் - உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் என்ன? News Lankasri