மனைவியின் மரணத்திற்கு பிறகு வேறொரு பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொள்கிறார் தந்தை. சித்தியின் கொடுமையில் நந்தகுமார் மற்றும் விஜய்குமார் இருவரும் வளர்க்கிறார்கள். சொத்துக்கு ஆசைப்பட்டு தான், இரண்டாம் தாரமாக தனது தந்தையை திருமணம் செய்கொண்டார் சித்தி என்றும். அந்த பெண்ணுக்கு வேறொரு ஆண் நபருடன் தொடர்பு இருக்கிறது என்றும் தெரிந்துகொள்கிறார் நந்தகுமார்.

இதன்பின், தனது சகோதரனையும், தந்தையும் காப்பாற்ற பல பேரிடம் உதவி கேற்கிறார். ஆனால், யாரும் உதவி செய்ய முன் வரவில்லை. இதன்பின், ஒரு கட்டத்தில் தனது மாமாவுடன் ஊருக்கு சென்று விட இருவரும் நினைக்கிறார்கள். ஆனால், அவரோ இருவரில் ஒருவரை மட்டுமே என்னால் அழைத்து செல்ல முடியும் என்று கூற, பூவா தலயா போட்டு பார்க்கிறார்கள். இதில் ஜெயிக்கும் விஜய்குமாரை தன்னுடன் மாமா அழைத்து செல்கிறார்.

இதன்பின், பல முறை சித்தியிடம் கொடுமைகளை அனுபவிக்கும் நந்து, தவறான மனநிலைக்கு செல்கிறார். இதனால், ஒரு கட்டத்தில் தனது சித்தியை கொன்று விடுகிறார். நந்துவின் மனநலம் சரியில்லை என்று 20 வருடங்களுக்கும் மேல் சிறையில் அடைக்கப்படுகிறார். இதன்பின், பல வருடங்கள் கழித்து சிறையில் இருக்கும் தனது சகோதரனை சந்திக்க செல்லும், விஜயகுமார், தனது வருங்கால மனைவியையும் அழைத்து செல்கிறார்.

மனநிலை சரியில்லாமல் இருக்கும் நந்து, விஜயகுமாரின் வருங்கால மனைவியை பார்த்து தனது சித்தி என்று எண்ணி கோபமடைகிறார். இதன்பின் விஜயகுமாருக்கு திருமணம் நடக்கிறது. ஆனால், அப்பெண்ணிடம் இருந்து தனது சகோதரனை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி, சிறையில் இருந்து தப்பிக்கும் நந்து, தொடர்ந்து பல கொலைகளை செய்து வருகிறார்.

என்னதான், மனநிலையில் மிருகமாக இருந்தாலும், தனது அம்மாவை கற்பனையில் சந்திக்கும் போதெல்லாம், குழந்தையாக மாறிவிடுகிறார் நந்து. இறுதியிக் உண்மையை அறிந்துகொள்ளும் நந்து, கொலைமுயற்சியை கைவிட்டு, தனது அம்மா சென்ற இடத்திற்கே சென்று விடுகிறார்.

ஆளவந்தான் ஒரு பாடம்

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இப்படம், கமல் ஹாசன் எழுதி வெளியிட்ட 'தாயம்' என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டது. படத்தில் விஜயகுமார், நந்தகுமார் என்று இரு கதாபாத்திரத்தில் முதன்மையாக அமைக்கப்பட்டிருந்தது. இதில், நந்தகுமார் எனும் கதாபாத்திரத்தின் மனநிலை பாதிக்கப்பட்டது போல் தான் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனால், நந்துவிற்கு மனநிலை பாதிப்பு கிடையாது. நந்து அதிகமாக யோசிக்கும் மனநிலை கொண்டவராக தான் காட்சியளிக்கப்படுவார். இந்திய சினிமாவில், முதன் முதலில் மோஷன் காப்ச்சர் பயன்படுத்தி டபுள் ஆக்ஷன் எடுக்கப்பட்ட படம் ஆளவந்தான். மோஷன் கேப்ச்சர் Software-ஐ இந்திய சினிமாவில் அறிமுகப்படுத்தியதும் கமல் ஹாசன் தான்.

அதே போல், ஆளவந்தான் படத்தில் காட்டூன் காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். படம் வெளிவந்த சமயத்தில் இப்படத்தையும், குறிப்பாக இந்த காட்டூன் காட்சியையும் எள்ளிநகையாடியவர்கள் பலர்.

ஆனால் அப்போது அவர்களுக்கு தெரியவில்லை, இந்திய சினிமாவிலேயே முதன் முதலில் கார்ட்டூன் காட்சி படத்தில் இடம்பெற்றுள்ள ஆளவந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இன்ஸ்பிரேஷனாக வைத்து ஹாலிவுட் இயக்குனர் குயிடன் டரன்டீனோ இயக்கிய கில் பில் படத்தில் கார்ட்டூன் காட்சியை வைத்ததாக, குயிடன் டரன்டீனோவே பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இப்படம் விஷுவல் எபெக்ட்டுக்காக தேசிய விருதும் வென்றுள்ளது. குறிப்பாக ஒரு படத்தில் பிளாஷ் பேக் காட்சிக்கு செல்லவேண்டும் என்று ' சில வருடங்களுக்கு முன்பு' அல்ல குறிப்பிட்ட வருடத்தை காட்டுவார்கள். ஆனால் ஆளவந்தான் படத்தில் பிளாஷ் பேக் செல்லும் காட்சி அப்படி இருக்காது. பிளாஷ் பேக் காட்சியில் விஜயகுமார் மாமாவுடன் ஊருக்கு செல்லும் இடத்தில், பூவா தலயா போட்டு பார்ப்பார்கள்.

அப்போது அந்த நாணயத்தில் 1971 என்ற குறிப்பிட்டு இருக்கும். அது சரி, இதனை ஏன் குறிப்பிட்டு கவனிக்க வேண்டும் என்று நீங்கள் கேற்கலாம். ஏனென்றால் இது கமல் ஹாசனின் படம் என்பதே பதிலாகும். ஒவ்வொரு காட்சியிலும் பல விஷயங்களை ஒளித்து வைத்தே விளையாடியிருப்பார்.

இத்தைகைய பல விஷயங்களை உள்ளடக்கியா ஆளவந்தான் படம் 2000ஆம் ஆண்டு தோல்வியடைந்தது வருத்தம் என்றாலும். தற்போது இயக்குனராக, நடிகராக, நல்ல தொழில்நுட்பவல்லுனர் ஆகவேண்டும் என்றால் ஆளவந்தான் படத்தை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம் இருக்கிறது. வெளிவந்த நேரத்தில் ஆளவந்தான் வெற்றியடையாததற்கு அப்படம் காரணமில்லை.

ஏனென்றால், ஆளவந்தான் தற்போதைய காலகட்டத்தில் வெளியாகியிருந்தால், ப்ளாக் பஸ்டர் ஹிட் என்பதில் சந்தேகமேயில்லை. அப்படம் உருவான விதத்தில் தவறில்லை. அப்படம் வெளிவந்த நேரம் தான்.. 15 வருடங்களுக்கு பிறகு வரவேண்டிய படத்தை கமல் ஹாசன் 15 வருடத்திற்கு முன்பே எடுத்து ஹாலிவுட் சினிமாவிற்கு சவால் விட்டிருக்கிறார்.

ஆளவந்தான் தோல்வியில்லை, ஏனென்றால் வெற்றிகூட ஆளவந்தான் படத்திற்கு சிறிய பாராட்டு தான்..


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US