தனியா வர சொல்லி அழைப்பார்கள்.. மோசமான நிகழ்வுகளை பகிர்ந்த பிரபல நடிகை
ஆமனி
90 களில் தமிழ், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழியிலும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஆமனி. இவர் 1990 -ம் ஆண்டு வெளியான 'புதிய காற்று' படத்தின் மூலம் திரை பயணத்தை தொடங்கினார்.
இதன் பின்னர் தங்கமான தங்கச்சி, இது தாண்டா சட்டம், முதல் சீதனம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகி இருந்து ஆமனி, தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

மோசமான நிகழ்வுகள்
சமீபத்தில் ஆமனி, அவருக்கு ஆரம்ப காலத்தில் சினிமாவில் ஏற்பட்ட பல மோசமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், " நான் சினிமா துறையில் அறிமுகமாகும் போது பல கஷ்டங்களை சந்தித்தேன். சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி பின்னர் அது நகைச்சுவைக்காக தான் பேசியது போல் காட்டிக் கொள்வார்கள்".
"மேலும் அவர்கள் சொல்லும் இடத்திற்கு தனியாகவர வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள். எந்த தவறும் செய்யாமல் திரைத்துறையில் சாதிக்கலாம் என்று என்னுடைய அம்மா தான் தைரியம் கொடுத்ததாக"கூறியுள்ளார்.

காதல் கிசுகிசு, விவாகரத்து என நிஜ வாழ்க்கையிலும் பிரச்சனை சந்தித்துள்ளாரா எதிர்நீச்சல் சீரியல் ஹரிப்பிரியா- முழு விவரம்
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri