சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர் கான்.. காரணம் என்ன
சித்தாரே ஜமீன் பர்
இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளிவந்த படம் சித்தாரே ஜமீன் பர். இப்படத்தில் அமீர் கானுடன் இணைந்து ஜெனிலியா நடித்திருந்தார்.
மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. 10 நாட்களில் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் இப்படம் வசூலை அள்ளியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சிவகார்த்திகேயன் என்றும் ஆனால், அமீர் கானின் திடீர் முடிவால் அனைத்தும் மாறிவிட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதைப்பற்றி அமீர் கான் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் இதற்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதகவது:
"லால் சிங் சத்தா படத்திற்கு பின் சினிமாவிலிருந்து பிரேக் எடுக்க முடிவு செய்தேன். இதை இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னாவிடமும் தெரிவித்தேன். நடிகராக அல்லாமல் தயாரிப்பாளராக தொடருங்கள் என அவர் கூறினார். அதற்கு ஒப்புக்கொண்டேன். சித்தாரே ஜமீன் பர் படத்தை தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்கலாம் என முடிவு செய்து, சிவகார்த்திகேயன் மற்றும் ஃபர்ஹான் அக்தர் ஆகியோரிடம் கதை சொல்லப்பட்டது. அவர்கள் இருவரும் இப்படத்தின் கதை பிடித்துப்போக, அவர்களின் கால்சீட் வாங்கினோம்".
"ஆனால், ஒரு கட்டத்தில் இப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்துப்போக, இதில் ஏன் நாமே நடிக்கக்கூடாது என தோன்றியது. அந்த அளவிற்கு எனக்கு கதை பிடித்திருந்தது. இதை இயக்குநர் பிரசன்னாவிடம் கூறினேன். அவரும் சரி என்றார். இதன்பின் சிவகார்த்திகேயன் மற்றும் ஃபர்ஹான் அக்தர் இருவரிடமும் இதை பற்றி கூறி மன்னிப்பேன் கேட்டேன். முதலில் அவர்களுக்கு இது ஏமாற்றத்தை தந்தாலும், பின் எனது சூழ்நிலையை புரிந்துகொண்டனர்". என அமீர் கான் கூறியுள்ளார்.