அமீர் கான் மகளுக்கு நடந்து முடிந்த திருமணம்.. ஷார்ட்ஸ் பனியன் உடன் வந்த மாப்பிள்ளை! வைரல் வீடியோ
நடிகர் அமீர் கான் ஹிந்தி சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த லால் சிங் சத்தா படம் படுதோல்வி ஆன பிறகு, புது படங்கள் எதிலும் நடிக்காமல் பிரேக் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
அமீர் கானின் மகள் ஐரா கான் கடந்த சில வருடங்களாக நுபுர் ஷிகாரே என்ற பிட்னெஸ் ட்ரெய்னர் உடன் காதலில் இருந்தார். அவர்களது நிச்சயதார்த்தமும் கடந்த வருடமே நடந்தது.
திருமணம்
இந்நிலையில் நேற்று மாலை ஐரா கான் - நுபுர் ஷிகாரே திருமணம் எளிமையாக நடந்து முடிந்திருக்கிறது.
இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
மாப்பிள்ளை திருமணத்துக்கு முன்பு 8 கிலோ மீட்டர் ஜாக்கிங் சென்றுவிட்டு அதன்பின்பு அப்படியே ஷார்ட்ஸ் மற்றும் பனியன் அணிந்து திருமணத்தில் கலந்துகொண்டார்.
Aamir Khan's daughter Ira Khan and Nupur Shikhare's registered marriage pic.twitter.com/QKIj5AkCDu
— BollyHungama (@Bollyhungama) January 3, 2024