தனது 3வது காதலியுடன் ஜோடியாக நடிகர் அமீர்கான்.. முதன்முறையாக வெளிவந்த போட்டோ
அமீர்கான்
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு பெயர் போன நடிகர் என்றால் கமல்ஹாசன், மலையாளத்தில் The Complete Actor என மோகன்லாலை ரசிகர்களை கொண்டாடுவார்கள்.
அப்படி பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிப்பிற்காக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகர் தான் அமீர்கான்.
ஆனால் கடந்த சில வருடங்களாக இவர் நடிக்கும் படங்கள் சரியாக ஓடவில்லை. 60வது பிறந்தநாளை அண்மையில் படு கோலாகலமாக கொண்டாடி இருந்தார் அமீர்கான்.
3வது காதலி
தற்போது பட தகவலை தாண்டி அமீர்கானின் 3வது காதலி பற்றிய பேச்சு தான் இப்போது அதிகம் வலம் வருகிறது.
அமீர்கான் தனது முதல் மனைவி ரீனா டட்டாவை 2002ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு 2005ம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை மறுமணம் செய்தார், ஆனால் இவர்களுக்கு 2021ம் ஆண்டு விவாகரத்து ஆனது.
2 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற அமீர்கான் தற்போது தனது புதிய காதலியுடன் வலம் வர தொடங்கியுள்ளார். அமீர்கானின் மூன்றாவது காதலியான கவுரி ஸ்பார்ட்டின் சொந்த ஊர் பெங்களூரு, திருமணம் ஆகி கணவரை பிரிந்து தனது 6 வயது மகனுடன் வசித்து வருகிறார்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் தனது 3வது காதலியுடன் கலந்துகொண்டிருக்கிறார், அந்த புகைப்படங்கள் தான் வைரலாகி வருகிறது.