61 வயதில் மூன்றாம் திருமணம் செய்யும் நடிகர் அமீர் கான்! பெண் யார் பாருங்க

By Parthiban A Jun 03, 2026 01:17 PM GMT
Report

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான். அவர் கடந்த சில வருடங்களாக படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்டிருக்கிறார். சில வருடங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்கள் நடிக்க தொடங்கிய அவரது நடிப்பில் கடந்த வருடம் சித்தாரே சமீன் பர் என்ற படம் வெளியாகி இருந்தது.

மேலும் ரஜினிகாந்தின் கூலி படத்திலும் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் அவர் நடித்திருந்தார். அது நெகடிவ் விமர்சனங்களையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து அவர் எந்த புது படங்களிலும் நடிக்கவில்லை. மாறாக தனது தயாரிப்பில் படங்கள் எடுத்து வருகிறார் அவர்.

61 வயதில் மூன்றாம் திருமணம் செய்யும் நடிகர் அமீர் கான்! பெண் யார் பாருங்க | Aamir Khan Third Marriage With Gauri Spratt

மூன்றாம் திருமணம்

தற்போது 61 வயதாகும் அமீர்கான் மூன்றாவது திருமணம் செய்ய இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் 47 வயதாகும் கௌரி ஸ்ப்ராட் என்பவரை தான் திருமணம் செய்ய போகிறாராம்.

மிகவும் எளிமையான வகையில் ரிஜிஸ்டர் திருமணம் தான் அவர்கள் செய்ய இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த திருமணத்தில் மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அமீர் கான் மற்றும் கௌரி இருவரும் திருமணம் செய்யாமலேயே கடந்த பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. எங்களுக்கு மனதளவில் திருமணம் நடந்துவிட்டது போலத் தான் என அமீர் கான் முன்பே ஒரு பேட்டியில் கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பெங்களூரை சேர்ந்த கௌரி, பாதி தமிழ், பாதி Irish பெண் என்பது குறிப்பிடத்தக்கது.  

61 வயதில் மூன்றாம் திருமணம் செய்யும் நடிகர் அமீர் கான்! பெண் யார் பாருங்க | Aamir Khan Third Marriage With Gauri Spratt

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US