படிக்கும்போது School Fees கட்டவே கஷ்டப்பட்ட நடிகர் அமீர்கானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- இத்தனை கோடியா?
அமீர்கான்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் 3 கான்களில் ஒருவர் தான் அமீர்கான்.
சினிமாவில் அறிமுகமானோம், காதல் படங்கள் நடித்தோம் ஹிட் கொடுத்தோம், பாக்ஸ் ஆபிஸ் நாயகனானோம் என்றில்லாமல் தனித்துவமான கதை தேர்வின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் அமீர்கான்.
இவர் நடித்த லகான், ஃபனா, ரங் கே பசந்தி, தாரே ஸமீன்பர், 3 இடியட்ஸ், பிகே, தங்கல் என நிறைய மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது.
சொத்து மதிப்பு
ஒரு படத்திற்கு ரூ. 100 கோடி முதல் ரூ. 175 கோடி வரை சம்பளம் வாங்கும் அமீர்கான் தற்போது சித்தாரே ஸமீன் பர் படத்தில் நடித்து வருகிறார்.
அமீர்கான் ஒரு பேட்டியில், எனது அப்பா தயாரிப்பாளராக இருந்தும் அவருக்கு பணம் சரியாக வரவில்லை, 36% வட்டிக்கு எல்லாம் பணம் வாங்கினார். எனது பள்ளிக் கட்டணம் அதிகபட்சம் ரூ. 10 இருக்கும், அதை கூட கட்ட முடியாது என சில விஷயங்கள் கூறியிருந்தார்.
அப்படி பள்ளி கட்டணம் கூட கட்டமுடியாமல் கஷ்டப்பட்டு படித்த அமீர்கான் சினிமாவில் நுழைந்து பல சாதனைகள் புரிந்துள்ளார். தற்போது ஆடம்பர வாழ்க்கை வாழும் அவர், மும்பையில் கடலை பார்க்கும் வகையில் ஒரு வீடு வைத்துள்ளார், அதன் மதிப்பு ரூ. 60 கோடியாம்.
நடிகராகவும், தயாரிப்பாளராகவும் கலக்கி வரும் அமீர்கானின் சொத்து மதிப்பு ரூ. 1800 கோடி என்று கூறப்படுகிறது.