6 நாள் முடிவில் வெற்றிநடைபோடும் ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது செய்த மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா?
ஆண்பாவம் பொல்லாதது
தமிழ் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கும் நடிகர்களில் ஒருவர் தான் ரியோ ராஜ்.
தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து மக்களின் மனதிலும் நல்ல இடத்தை பிடித்து வருகிறார்.
டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்க கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள படம் தான் ஆண்பாவம் பொல்லாதது.

ரியோ ராஜ்-மாளவிகா மனோஜ் ஜோடியாக நடித்துள்ள இப்படத்தில் ஷீலா ராஜ்குமார், விக்னேஷ்காந்த், ஏ.வெங்கடேஷ், ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர். கணவன்-மனைவி இடையேயான ஈகோ பிரச்சனை முற்றி விவாகரத்து வரை செல்கிறது.
நீதிமன்றத்தில் யாருடைய ஈகோ வெற்றிபெற்றது? விவாகரத்து என்ன ஆனது என்பதை கலகலப்பாக இப்படம் பேசுகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
ரசிகர்களின் பேராதரவில் வெற்றிநடைபோடும் ஆண்பாவம் பொல்லாதது படம் நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான இப்படம் 6 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 6.3 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளது.