7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு?
ஆண்பாவம் பொல்லாதது
சின்ன பட்ஜெட்டில் தயாரானாலும் தரமான கதைக்களத்தை கொண்டு நிறைய படங்கள் வெளியாகின்றன.
ரசிகர்களும் நடிகரோ, பட்ஜெட்டோ பெரிதல்ல கதை தான் முக்கியம் வகையில் நிறைய படங்களை வெற்றிப்பெற வைத்துள்ளனர். அப்படி ஒரு தரமான கதைக்களத்தை கொண்டு அண்மையில் வெளியான படம் தான் ஆண்பாவம் பொல்லாதது.

கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான இப்படத்திற்கு முதன்நாள் குறைந்த காட்சிகளுடன் ஒளிபரப்பானாலும் பாசிட்டிங் விமர்சனங்கள் வர தற்போது அதிக திரைகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
வசூல்
டிக்கெட் புக்கிங் படு மாஸாக நடந்துள்ளது, ரசிகர்களும் படத்திற்கு அதிக வரவேற்பு கொடுக்க கலெக்ஷன் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

முதல் 3 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 5 கோடி வரை வசூலித்திருந்தது. படம் ரிலீஸ் ஆகி 7 நாள் முடிவில் இதுவரை மொத்தமாக ரூ. 6.8 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.