வெற்றிகரமாக ஓடிய ஆண்பாவம் பொல்லாதது படத்தின் OTT ரிலீஸ் தேதி... எப்போது தெரியுமா?
ஆண்பாவம் பொல்லாதது
கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஷீலா ராஜ்குமார் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆண்பாவம் பொல்லாதது படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியானது.
இப்படம் வெளியான தினத்தில் இருந்து நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது ஆண்பாவம் பொல்லாதது.
ரூ. 5 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் தமிழக வசூலில் இதுவரை ரூ. 20 கோடி மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓடிடி ரிலீஸ்
2025ல் வெளியான படங்களில் டாப் வசூல் வேட்டை செய்துள்ள படமாக ஆண்பாவம் பொல்லாதது படம் உள்ளது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பான ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம் வரும் நவம்பர் 28ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம்.