ஆண்பாவம் பொல்லாதது திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஆண், பெண் உறவு சிக்கல் குறித்து சில படங்கள் பேச தொடங்கியுள்ளது. அந்த வகையில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ, மாளவிகா, விக்னேஷ் காந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ஆண்பாவம் பொல்லாதது பார்ப்போம்.

கதைக்களம்
ரியோ ஐடி வேலையில் இருப்பவர், இவர் செம மாடர்ன் சிந்தனை கொண்ட மாளவிகா மனோஜை திருமணம் செய்து கொள்கிறார்.

ஆரம்பத்தில் ஓகே என்றாலும் அதன் பிறகு இதுவருக்கும் செமயா முட்டி கொள்கிறது. ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை பூகம்பமாக வெடிக்க, கோர்ட் வாசலுக்கு வருகின்றனர்.

பிறகு என்ன ஆனது, யார் பாக்கம் நியாயம், யார் வென்றார்கள் இல்லை ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டார்களா என்பதை செம கலகலப்பாக கூறப்பட்டுள்ளதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ரியோ நாயகனாக கண்டிப்பாக இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தருக் என்பதில் மாற்று கருத்து இல்லை, அந்தளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார். கண்டிப்பாக இதன் பிறகு ரியோக்கு இன்னும் பெரிய வாய்புக்கள் கிடைக்கும்.
மாளவிகா மனோஜ், அட ஜோ படத்தில் நடித்த பொண்ணா இது என்பது போல் ஆர்பாட்டம் செய்கிறார், கண்டிப்பாக மாளவிகா தமிழ் சினிமாவில் நல்ல தடம் பதிப்பார் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ரியோ-க்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவிற்கு விக்னேஷ் காந்த் காட்சிகளும் செம வரவேற்பு தான், மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு காமெடி+கருத்து வசனங்கள் மூலம் கவர்ந்துள்ளார், ஜென்சன் திவாகர் கவுனடர் வசனங்களும் சூப்பர்.
படத்தின் முதல் பாதி எல்லாம் செம்ம சிரிப்பு சரவெடி தான், அதே அளவிற்கு இரண்டாம் பாதியும் இன்னும் கொஞ்சம் அமைந்திருக்கலாம் ஆனால் அதையும் விக்னேஷ் காந்த் கவுண்டர் வசனங்கள் ஈடுகட்டி நம்மை கவர்கிறது.

அதோடு எமோஷ்னல் காட்சிகள் இன்னமும் அழுத்தமாக இருந்திருக்கலாம், டெக்னிக்கலாக படம் வலுவாகவே உள்ளது, இசை, ஒளிப்பதிவு அனைத்தும் பிரமாதம்.
க்ளாப்ஸ்
நடிகர், நடிகைகள் பங்களிப்பு.
படத்தின் முதல் பாதி.
வசனங்கள்.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி இன்னமும் மெருகேத்திருக்கலாம்.
எமோஷ்னல் காட்சிகள் இன்னமும் அழுத்தமாக எடுத்திருக்கலாம்.
மொத்தத்தில் காதலன்-காதலி, புதிதாக திருமணம் செய்தவர்கள் என அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
