அஜித்தின் ஆரம்பம் படம் வெளியாகி 10 வருடம் ஆனது- படத்தின் முழு வசூல் விவரம் தெரியுமா?
அஜித்தின் ஆரம்பம்
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்சி என பலர் நடிக்க கடந்த அக்டோபர் 31, 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆரம்பம்.
இப்படம் தீபாவளிக்கு முன் இரண்டு நாள்களுக்கு முன்னதாக வெளியானது, அஜித் கேரியரில் ஆரம்பம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
மங்காத்தா படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் முழுக்க முழுக்க அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வந்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த படத்தில் ஹீரோயினாக முதலில் அனுஷ்கா ஷெட்டி, அமலாபால், காஜல் அகர்வால் ஆகியோர் பெயர் பரிசீலனை செய்யப்பட்டு இறுதியாக பில்லாவில் நடித்த நயன்தாராவையே விஷ்ணுவர்தன் தேர்வு செய்தார்.
மேலும் 2வது ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மயக்கம் என்ன படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த ரிச்சா கங்கோபாத்பாய் பரிசீலனை செய்யப்பட்டு பின்னர் டாப்ஸி நடித்தார்.
படத்தின் வசூல்
ரூ. 60 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 124 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.