அஜித் மீதான விமர்சனங்களை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக பேசிய பிக் பாஸ் பிரபலம் !
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர எச்.வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை.
ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படம் உலகமுழுவதும் தற்போது வரை ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே இப்படம் வெளியானதில் இருந்து பலரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.

குறிப்பாக யூடியூப் திரைப்படங்களை விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் வலிமை படத்தை விமர்சித்து இருந்தார். வலிமை படத்தை மட்டுமின்றி அஜித் குறித்தும் அவர் மோசமாக விமரித்து இருந்தார்.
இதனிடையே தற்போது பிக் பாஸ் சீசன் 4 பிரபலமான ஆரி சமீபத்திய பேட்டி ஒன்றில் இதற்கு பதிலடி கூறும் வகையில் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது " ப்ளூ சட்டை மாறன் தரம் தாழ்ந்த விமர்சனங்களை தவிர்க்க வேண்டும், தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் ஏன்னென்றால் அதுவே உங்களுக்கு திரும்பி வரும். தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்தும், உழைப்பால் உயர்ந்தவர் தான்" என பேசியுள்ளார்.

Exclusive Update : கமல் ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி..
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri