நான் தவறு செய்யவில்லை, அழ மாட்டேன்... ரவி மோகன் பேட்டி குறித்து ஆர்த்தியின் அம்மா சுஜாதா
ரவி மோகன்
ரசிகர்கள் மனதில் பெரிய இடம் பிடித்திருந்தவர் தான் நடிகர் ரவி மோகன்.
சினிமாவில் நுழைந்த நாள் முதல் எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல், கிசுகிசுவில் மாட்டிக்கொள்ளாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி தனது சினிமா பயணத்தை அழகாக கொண்டு சென்றார்.

ஆனால் கடந்த வருடம் முதல் ரவி மோகன் சொந்த வாழ்க்கையால் பெரிய கஷ்டத்தில் உள்ளார், அதனால் நிறைய விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.
இன்று திடீரென பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரவி மோகன், எனது சொந்த வாழ்க்கை பிரச்சனை தீரும் வரை நான் நடிக்கப்போவதில்லை, என்னால் நடிக்க முடியவில்லை. எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள் என்றார்.
மேலும் தான் வாழ்க்கையில் இத்தனை வருடங்கள் பல சோதனைகளை சந்தித்தேன் என கண்ணீர்விட்டபடி நிறைய விஷயங்கள் கூறியிருந்தார்.

ஆர்த்தி அம்மா
இந்த நிலையில் ஆர்த்தியில் தாயார் சுஜாதா கூறுகையில், ஒன்றரை வருடமாக நீதிமன்றத்தில் இருக்கும் விஷயத்தை இன்று ரவி மோகன் பேசி உள்ளார்.
நான் எந்த தவறும் செய்யவில்லை, தவறு செய்யாததால் அழ மாட்டேன், எமோஷ்னல் ஆக மாட்டேன், ரவியின் பேச்சால் குழந்தைகளுக்கு மன உளைச்சல்.
அவருக்கு என்ன மன உளைச்சல் என்று தெரியவில்லை, குழந்தைகளை பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறுவது பொய். என்மீதான அவதூறுகளுக்கு நான் நிச்சயம் பதில் சொல்வேன்.

திருமணமான பிறகு ஒரே வங்கி கணக்கு வைத்திருப்பது தவறில்லை, வழக்கு நிலுவையில் இருப்பதால் இதுவரை நான் இதுபற்றி பேசியதில்லை. எல்லா பெற்றோரும் குழந்தைகளுக்காகவே வாழ்கிறார்கள் என கூறியுள்ளார்.