ஆர்த்தி ரவி தொடர்ந்த அவதூறு வழக்கு... கெனிஷாவிற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு
ரவி மோகன்
தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் இல்லா பிரபலமாக வலம் வந்தவர் தான் நடிகர் ரவி மோகன்.
விதவிதமான கதைக்களம் கொண்ட படங்கள் தேர்வு செய்து நடித்து அசத்திவந்த ரவி மோகன் வாழ்க்கையில் கடந்த வருடம் சில அதிரடி விஷயங்கள் நடந்துவிட்டன. ரவி மோகன் முதலில் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக பதிவு போட்டார்.
ஆனால் இந்த விவாகரத்து குறித்து தன்னிடம் பேசாமல் ரவி மோகன் இப்படியொரு பதிவு போட்டதாக ஆர்த்தி பதிவு போட அங்கிருந்து பிரச்சனை துவங்கியது. மாறி மாறி இருவரும் சமூக வலைதளங்களில் புகார் அளித்துக்கொள்ள பேசும்பொருளானது.
தற்போது நீதிமன்றத்தில் இவர்களது விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையில் இவர்களது பிரச்சனை பாடகி கெனிஷா பெயர் அடிபட்டது.

நீதிமன்றம்
ரவி மோகன், ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் கெனிஷா சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி ஆர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசவும், பதிவுகளை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே வெளியிடப்பட்ட பதிவுகளை நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இழப்பீடாக ரூ.1 கோடியே 1 லட்சம் வழங்கவும் கோரியுள்ளார். தற்போது ஆர்த்தி கெனிஷா மீது போட்ட வழக்கு வரும் டிசம்பர் 3ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்று கெனிஷா விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.