பாடகியுடன் கைகோர்த்து வந்த ரவி மோகன்.. ஆர்த்தி கோபமாக வெளியிட்ட அறிக்கை
நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். அவர் ஆர்த்தியை கடந்த வருடம் செப்டம்பரில் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
அவர்கள் விவாகரத்துக்கு பாடகி கெனிஷா என்பவர் தான் காரணம் என அப்போதே சர்ச்சை எழுந்தது. ஆனால் அவர்கள் அதை மறுத்தனர்.
இந்நிலையில் இன்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண நிகழ்ச்சிக்கு ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஜோடியாக கைகோர்த்து வந்தனர். அதனால் அவர்கள் ரிலேஷன்ஷிப் உறுதியாகி இருக்கிறது.
ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை
இந்நிலையில் தற்போது ஆர்த்தி இன்ஸ்டாவில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
ஒரு வருடமாக என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு நான் எந்த பதிலும் கூறாமல் இருந்தேன். தற்போது உலகம் கூர்ந்து கவனித்து உண்மை வேறு என்பதை தெரிந்துகொண்டிருக்கும் என கூறி இருக்கிறார்.
தன்னை ரவி மோகனின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் என மீடியாவிடம் கேட்டிருக்கிறார். சட்டப்படி இன்னும் விவாகரத்து பெறவில்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் ஒரு அப்பாவாக ரவி மோகன் தனது மகன்களை தவிக்கவிட்டு சென்றுவிட்டதாகவும், எந்த பண உதவியும்இருவரும் சேர்ந்து கட்டிய வீட்டை பேங்க் மூலமாக காலி செய்ய வைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.



சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
