முதல் நாள் உலகளவில் ஆரியன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
ஆரியன்
நேற்று திரையரங்கில் வெளிவந்த ஆரியன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

எப்போதும் தரமான திரைப்படங்கள் மூலம் மக்களை மகிழ்விப்பார் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளியான படம் ஆரியன். இப்படத்தை இயக்குநர் பிரவீன் கே. இயக்க விஷ்ணு விஷால் இப்படத்தை தயாரித்திருந்தார்.

இப்படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்தார். சற்று மாறுபட்ட கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வசூல்
இந்த நிலையில், முதல் நாள் மட்டுமே ஆரியன் படம் உலகளவில் ரூ. 1.4 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எவ்வளவு வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
