மலையாள படம் ஆவேசம் செய்த வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்
ஆவேசம்
பகத் பாசில் மலையாளத்தில் முன்னணி ஹீரோ ஆவார். இவர் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், மாமன்னன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மலையாள திரைப்படம் தான் ஆவேசம். இப்படத்தை ஜீத்து மாதவன் என்பவர் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த ரோமச்சன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
இதை தொடர்ந்து வெளிவந்த ஆவேசம் திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படம் வெளிவந்த 10 நாட்களில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது தகவல் வெளியாகியுள்ளது.
ப்ரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து ஆவேசம் திரைப்படமும் தென்னிந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இனி வரும் நாட்களிலும் இப்படம் வசூலில் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri
