OTT மட்டும் இத்தனை கோடிகள் விற்றதா ஆவேசம்..வசூல் மன்னனாக மாறிய பகத் பாசில்
ஆவேசம்
மலையாளத்தில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் ஆவேசம். பகத் பாசில் நடிப்பில் ஜீது மாதவன் இயக்கத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ப்ரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ், பிரமயுகம் உள்ளிட்ட படங்களின் வரிசையில் ஆவேசம் திரைப்படத்திற்கும் உலகளவில் நல்ல வசூல் கிடைத்தது. ஆம், இப்படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
வசூல் - ஓடிடி
திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய இப்படத்தை இன்று ஓடிடி-யில் வெளியிடுகின்றனர். இப்படம் ஓடிடி-யில் வெளிவருவதாக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஆவேசம் நல்ல விருந்தாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில், ஆவேசம் திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ரூ. 35 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்களாம். இது இப்படத்தின் ஓடிடி உரிமைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய தொகை என கூறப்படுகிறது.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri