அம்மா உணவகத்தால் உயிர் வாழ்ந்தேன்.. மறைந்த நடிகர் அபிநய் மறுபக்கம் என்ன?
அபிநய்
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் அபிநய். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். கடைசியாக சந்தானம் நடித்திருந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்திருந்தார்.
இதன்பின் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வரும் நடிகர் அபிநய், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது.
கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய் சில தினங்களுக்கு முன் மரணம் அடைந்தார் என்ற செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது அபிநய் உயிருடன் இருந்த போது பேசிய பல விஷயங்கள் இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது.

மறுபக்கம் என்ன?
இந்நிலையில், அபிநய் பேட்டி ஒன்றில் முன்பு பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " நான் கிட்டத்தட்ட 2 வருடங்கள் அம்மா உணவகத்தில் தான் சாப்பிட்டு வந்தேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அது தான் நான் உயிர் வாழ காரணமாக இருந்தது. இதை சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
