விவாகரத்து சர்ச்சைக்கு பின் முதல் முறையாக மனைவியுடன் அபினை! போட்டோ வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி
ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் மகள் வழி பேரன் என்கிற அடையாளத்தோடு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அபினை வட்டி.
விவாகரத்து வதந்தி
அவர் ஷோவில் பாவனிக்கு காதல் தொல்லை கொடுத்தது சர்ச்சையாக மாறிய நிலையில் அவரது மனைவி அபர்ணா விவாகரத்து பெற முடிவெடுத்துவிட்டதாக தகவல் வெளியானது.
ஆனால் அபினை அதை மறுத்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு அவர் மனைவி மற்றும் மகள் உடன் ஒரு போட்டோ கூட வெளியிடவில்லை. மனைவி தன் பெயருக்கு பெயருக்கு பின்னால் 'அபினை' என இருந்ததை நீக்கியது ஏன் என கேட்டதற்கு மழுப்பலாக பதில் கூறினார்.
பிக் பாஸுக்கு பின் முதல் போட்டோ
இந்நிலையில் நேற்று அபினை வட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கு தனது பிக் பாஸ் நண்பர்கள் எல்லோரையும் அழைத்து பார்ட்டி கொடுத்து இருந்தார்.
அந்த பார்ட்டிக்கு அபினை மனைவி அபர்ணாவும் வந்திருக்கிறார். அந்த போட்டோவை அவர்கள் இருவருமே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கின்றனர்.
இந்த போட்டோ மூலமாக அவர்கள் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கின்றனர்.
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan