சிம்பு செய்த விஷயம்.. பிக் பாஸ் பைனலில் கதறி அழுத அபிராமி! காரணம் இதுதான்
பிக் பாஸ் அல்டிமேட் ஷோ இன்றோடு முடிவுக்கு வருகிறது. இந்த வாரத்தில் பைனலுக்கு முன்பே எலிமினேட் ஆன அபிராமியை மேடைக்கு அழைத்து சிம்பு பேசினார்.
அப்போது அபிராமி எதிர்பார்க்காத வகையில் அவரது அப்பாவை மேடைக்கு வர வைத்தார் சிம்பு. அவரை பார்த்ததும் அபிராமி கதறி அழ தொடங்கிவிட்டார். இத்தனை காலம் குடும்பத்தை பிரிந்து இருந்த அப்பாவை எப்படி மிஸ் செய்தேன் என அபிராமி உருக்கமாக பேசி கண்ணீர் விட்டார்.
"அப்பா இல்லாமல் நான் அதிகம் கஷ்டப்பட்டு இருக்கிறேன். நான் strong ஆன பெண் தான். பல விஷயங்களை கடந்து வந்திருக்கிறேன். ஆனால் அப்பா இல்லாததால் அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறேன். அவர் உடன் இருந்திருந்தால் நான் இந்த கஷ்டத்தை எல்லாம் பட்டிருக்கிறேன்" என அபிராமி கூறினார்.
அபிராமியின் அம்மாவும் கண்ணீர் விட்டு பேசினார். "துணை இல்லாமல் இரண்டு குழந்தைகளை வளர்ப்பது எவ்வளவு கடினம். அந்த கஷ்டத்தை நான் பட்டிருக்கிறேன். அவர் திரும்பி வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. இனிமேலாவது அவரது பாசம் என் குழந்தைகளுக்கு கிடைக்கும்" என அவர் கூறி இருக்கிறார்.
அர்ச்சனா மகளுக்கு வந்த லவ் ப்ரோபோசல்! வீடியோவில் அர்ச்சனா கொடுத்த பதிலை பாருங்க