சினிமாவில் அந்த மாதிரி விஷயம் இருக்கு.. கசப்பான அனுபவத்தை சொன்ன அபிராமி!!
அபிராமி
உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை அபிராமி.
இவர் வானவில், சமுத்திரம், தோஸ்த், சார்லி சாப்ளின் போன்ற படங்களில் நடித்துள்ளார். அபிராமி தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்திருக்கிறார். தற்போது இவர் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கசப்பான அனுபவம்
சினிமா துறையில் நடிகைகள் உருவக்கேலியை எதிர்கொள்வது போன்ற கசப்பான அனுபவம் அபிராமிக்கும் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து அபிராமி கூறும்போது, "உடல்ரீதியாக விமர்சனங்களை எதிர்கொண்டேன். என்னுடைய உயரத்தை வைத்து கேலி செய்து இருக்கிறார்கள்".
"அதே போல என்னுடைய தாடையும் கொஞ்சம் நீளமாக இருக்கும், அதையும் சிலர் கிண்டல் அடித்திருக்கிறார்கள். சிறுவயதில் தாடையை பிடித்து இழுத்து இழுத்து பார்த்து இருக்கிறார்கள். அதுவும் நீளமாக காரணமாக இருக்கலாம்" என்று அபிராமி கூறியுள்ளார்.

Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri