49வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் அபிஷேக் பச்சனின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா
அபிஷேக் பச்சன்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அபிஷேக் பச்சன். இவர் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் மகன் என்பதை அனைவரும் அறிவோம்.
2000ம் ஆண்டு வெளிவந்த Refugee படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் 25 ஆண்டுகளை சினிமாவில் கடந்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அபிஷேக் பச்சன். இவர்களுக்கு ஆராத்யா எனும் மகள் ஒருவர் இருக்கிறார். Housefull 5 திரைப்படத்தில் அபிஷேக் பச்சன் தற்போது நடித்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
இன்று நடிகர் அபிஷேக் பச்சனின் 49வது பிறந்தநாள். இவருடைய ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அபிஷேக் பச்சனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 280 கோடி இருக்கும் என்கின்றனர். மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது.